சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஏழை குடும்பத்தை சேர்ந்த நான் விமானம் ஓட்டுகிறேன்!

Added : பிப் 09, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 ஏழை குடும்பத்தை  சேர்ந்த நான் விமானம் ஓட்டுகிறேன்!

நடுத்தர குடும்பத்து பெண் குழந்தைகள், அநேகமாக, கார் ஓட்டவே இன்னும் கற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், எளிய குடும்பத்தைச் சேர்ந்த, விமானம் ஓட்டும் காவ்யா: மதுரை தான் சொந்த ஊர். அப்பா, ரவிக்குமார், மதுரையில், அரசு பேருந்து ஓட்டுனராக உள்ளார். அம்மா கல்பனா. பழங்காநத்தம் பகுதியில் தான் வசிக்கிறோம். அங்கு இருக்கும் வரை, சைக்கிள் ஓட்டக் கூட பயந்தவள் தான் நான்;

இப்போது, விமானங்களை ஓட்டுகிறேன்.சிறு வயதாக இருக்கும் போதே, விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. மதுரை டி.வி.எஸ்., பள்ளியில் படித்தேன். அப்போதே, நன்றாக படித்து, வழக்கமான பணிகளை தேர்வு செய்யாமல், மாறுபட்ட துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என எண்ணினேன். 'எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?' என, யாராவது கேட்டால், 'விமானம் ஓட்ட வேண்டும்' என்பேன்.கடந்த, 2013ல், பிளஸ் ௨ முடித்ததும், பெங்களூரில் உள்ள, ஜக்கூர் விமான பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, விமானங்கள் ஓட்ட பயிற்சி பெற்றேன். இதை அறிந்த உறவினர்கள், 'பொம்பள பிள்ளைக்கு, இந்தப் படிப்பு தேவையா...' என, என் பெற்றோரை கண்டித்தனர்.

ஆனால், என் பெற்றோர், என் ஆசைப்படி, விமானங்கள் ஓட்ட தைரியமாக அனுமதித்தனர். அதிக பொருட்செலவு பிடிக்கும் இந்தப் படிப்பிற்காக, என் தந்தை, தன் தகுதிக்கு மீறி, அதிகமாக கடன் வாங்கி, செலவு செய்தார். பெங்களூர் பயிற்சி மையத்தில், 200 மணி நேர பயிற்சிக்கு பின், விமானத்தின் இரண்டு பைலட்டுகளில் ஒருவராக வானில் பறந்தேன். பின், தனியாக, விமானத்தை இயக்கினேன். அதன் பின், விமானி லைசென்ஸ் கிடைத்தது. அரசு வழங்கிய, 'ஸ்காலர்ஷிப்பில்' படித்து, தொடர்ந்து பயிற்சி பெற்றேன். பயிற்சிக்குப் பின், அந்த விமான பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவராக சேர்ந்து, விமானம் ஓட்ட, பிறருக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.

பெரிய விமானங்களை ஓட்டுவதற்கு, வெளிநாடுகளுக்கு சென்று, கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கு, பணமும் நிறைய செலவாகும். அந்த ஆசையும், விரைவில் நிறைவேறும். இதுவரை, 450 மணி நேரம், விமானத்தில் பறந்துள்ளேன். விமானங்களை ஓட்டும் பயிற்சி அல்லது படிப்பு, வசதியானவர்களுக்கு மட்டும் தான் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும், பறப்பதற்காக படிக்க முடியும். தகுதியுள்ள மாணவர்களுக்கு, அரசு, ஸ்காலர்ஷிப் வழங்குகிறது. சிவில் விமானி ஆவதற்கு, படிப்பு செலவு கொஞ்சம் ஜாஸ்தி தான். ஸ்காலர்ஷிப் கிடைத்தால், யார் வேண்டுமானாலும், இந்த படிப்பில் சேர முடியும்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
10-பிப்-202011:16:09 IST Report Abuse
Visu Iyer சபாஷ் டா.. செல்லம்..
Rate this:
Share this comment
Cancel
sripa - muscat,ஓமன்
10-பிப்-202010:14:32 IST Report Abuse
sripa வாழ்த்துக்கள் சகோதரி. உன் சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X