டில்லி சட்டசபை தேர்தலில் 62.59 சதவீதம் ஓட்டுப்பதிவு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (5+ 36)
Advertisement
delhi, election, percentage, டில்லி, தேர்தல், சதவீதம், கெஜ்ரிவால், முதல்வர்

புதுடில்லி: டில்லி தேர்தலில், இறுதி ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான. ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 61.46 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தது.

ஆனால், இறுதி ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லி தேர்தலில் ஓட்டுபதிவு சதவீத விபரத்தை, பல மணி நேரத்துக்கு பிறகும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. பா.ஜ., அலுவலகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறதா என சந்தேகமாக உள்ளது. டில்லி ஓட்டுப்பதிவு எவ்வளவு என, தெரிய மக்கள் காத்திருப்பது, தேர்தல் வரலாற்றில், இதுவே முதல் முறை.இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையில், நேற்று மாலை, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், டில்லி சட்டசபை தேர்தலில், 62.59 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளதாக, அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5+ 36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
10-பிப்-202016:11:19 IST Report Abuse
Endrum Indian நாளை தெரியும் டில்லி மக்கள் எவ்வளவு (இலவசம் விரும்பிகள்) ஏழைகள் என்று எவ்வளவு அறிவிலிகள் என்று. டில்லி இந்தியாவின் தலைநகரம் அங்கேயே இப்படித்தான் என்றால் இந்தியா முழுவதும் கேட்கவே வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
10-பிப்-202012:29:11 IST Report Abuse
Sridhar எங்கே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற பயம் இருக்க தானே செய்யும்? தகுதி இல்லாத மூடர்களுக்கு இந்தியாவில் தான் இவ்வாறு அதிர்ஷ்டம் அடிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
10-பிப்-202007:25:35 IST Report Abuse
Pandiyan டெல்லி தேர்தல் ஓட்டு சதவிகிதம் இந்தனை நாட்கள் கழித்து தேர்தல் கமிசன் வெளியிடுவதும்..ஐந்து மணிக்குமேல் பத்து சதவிகிதத்திற்கு மேல ஓட்டுப்பதிவு விழுந்துள்ளது என்பதும்..திரு அமிர்சாவின் தேர்தலுக்கு பிந்தைய பேட்டியும் கூட்டிக்கழித்து பார்த்தால் ...தேர்தல் கமிஷன் மீது பெருத்த சந்தேகங்கள் எழும்புகின்றன ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X