மாநிலங்கள் பங்கு தொகை ரூ.35,000 கோடி ஒதுக்கீடு

Added : பிப் 09, 2020
Advertisement

புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி முறை அறிமுகத்தால், மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில், 35 ஆயிரம் கோடி ரூபாய், விரைவில் வழங்கப்பட உள்ளது.

ஜி.எஸ்.டி., முறை, 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரி முறையால், ஏற்கனவே அதிக வரி பெற்று வந்த மாநிலங்களுக்கு இழப்பு ஏற்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு அது ஈடு செய்யப்படும் என, ஜி.எஸ்.டி., சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2017- 2018, 2018 - 2019 நிதியாண்டுகளிலும், நடப்பு நிதியாண்டில், முதல் நான்கு மாதங்களிலும், இழப்பு ஈடு செய்யப்பட்டது.ஆனால், வரி வசூல் குறைந்ததால், கடந்தாண்டு ஆகஸ்டில் இருந்து இந்த இழப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டது.

மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தியதால், கடந்தாண்டு ஆக., மற்றும் செப்., மாதங்களுக்கு இழப்பீடாக, 35 ஆயிரத்து, 298 கோடி ரூபாய், டிசம்பரில் வழங்கப்பட்டது. கடந்தாண்டு, அக்., மற்றும் நவ., மாதங்களுக்கான இழப்பீட்டு தொகை, இரண்டு தவணைகளாக விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்காக, 35 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X