பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் நாய்க்கு முதலாவது 'பேஸ் மேக்கர்' அறுவை சிகிச்சை

Added : பிப் 09, 2020
Advertisement
 இந்தியாவில் நாய்க்கு முதலாவது 'பேஸ் மேக்கர்' அறுவை சிகிச்சை

புதுடில்லி : இந்தியாவில், முதல் முறையாக, நாய்க்கு, இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக்காக, ஆப்பரேஷன் மூலம், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டது

. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியின் குர்கான் பகுதியில், மானு என்பவர், தன் வீட்டில், 'குஷி' என பெயரிட்டு, ஒரு நாய் வளர்க்கிறார்.இந்த, 'காக்கர் ஸ்பேனியல்' வகை நாய்க்கு, 7.5 வயதாகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், காது அறுவை சிகிச்சைக்காக, கால்நடை மருத்துவமனைக்கு, நாய் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடந்த பரிசோதனையில், குஷிக்கு இதய பாதிப்பு இருப்பதை, டாக்டர் குழுவினர் கண்டுபிடித்தனர்.

இதனால், நாய்க்கு அறுவை சிகிச்சை மூலம், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த, டாக்டர்கள் தீர்மானித்தனர்.சிறிய விலங்கினங்களுக்கான இதய நோய் சிறப்பு நிபுணர்கள், டாக்டர் குணால் மற்றும் டாக்டர் பானு ஆகியோர் அடங்கிய குழுவினர், கடந்த டிசம்பரம் மாதம், ஒன்றரை மணி நேர ஆப்பரேஷன் மூலம், நாய்க்கு வெற்றிகரமாக, பேஸ் மேக்கர் கருவியை பொருத்தினர். நாய்க்கு, ஆப்பரேஷன் மூலம் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது, நம் நாட்டில் இதுவே முதல் முறை. தற்போது, நாய் முழுமையாக உடல் நலம் திரும்பியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, குஷியின் உரிமையாளர் சோனு கூறும்போது, ''பேஸ் மேக்கர் அறுவை சிகிச்சைக்கு பிறகு, குஷி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இப்போது, குஷி, மீண்டும் சுறுசுறுப்பாக விளையாடுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X