பொது செய்தி

இந்தியா

ரூ.50 ஆயிரம் கோடி வங்கி கடன்

Added : பிப் 09, 2020
Advertisement

மும்பை : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வங்கிகளில், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்று, திரும்ப செலுத்தாத இந்தியர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை, பாதிக்கப்பட்டுள்ள வங்கிகள் தொடங்கியுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வங்கிகளில் கடன்பெற்று, பல இந்திய நிறுவனங்கள், தங்கள் கிளைகளை, அங்கு நிறுவியுள்ளன. அப்படி, கடன் பெற்ற, பல இந்திய நிறுவனங்கள், தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி, நிறுவன கிளைகளை மூடிவிட்டன. இதைத்தவிர, கடந்த, 10 - 15 ஆண்டுகளில், அங்குள்ள வங்கிகளில், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, கடனை பெற்ற இந்தியர்கள், அதை திரும்ப செலுத்தாமல், இந்தியாவில் தஞ்சமடைந்தது தெரியவந்துள்ளது.

நடவடிக்கைஎமிரேட்ஸ் என்.பி.டி., வங்கி, மாஷ்ரேக் வங்கி, அபுதாபி வணிக வங்கி, தோஹா வங்கி, ஓமன் தேசிய வங்கி, பக்ரைன் தேசிய வங்கி உள்ளிட்ட, ஒன்பது வங்கிகள், இது தொடர்பாக, இந்தியாவிடம் புகார் அளித்தன. இதையடுத்து, ஜனவரி, 17ம் தேதி, மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றங்கள், சிவில் வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை, இந்தியாவில் நடைமுறைப் படுத்தலாம்' என, அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வங்கிகள், நீதிமன்ற உத்தரவு பெற்றிருந்தால், கடனை திரும்ப செலுத்தாமல் இந்தியாவில் தஞ்சம்அடைந்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்க, உள்ளூர் வங்கிகளைப் போல், இந்தியாவில் நடவடிக்கைகளை எடுக்கலாம்.இந்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வங்கிகள், அங்குள்ள நீதிமன்றங்களில் முறையிட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள வங்கிகள், நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், கடனை திரும்ப செலுத்தாத இந்தியர்களிடம் இருந்து, கடனை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தொடங்கும்.


'நோட்டீஸ்'


குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்புவது உள்ளிட்ட, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்திய சட்ட நிறுவனங்களிடம், அந்த வங்கிகள் உதவி கேட்டுள்ளன. கடனை திரும்ப செலுத்தாத, இந்தியர்கள் பலர், இந்தியாவில் தஞ்சமடைந்து விட்டதாக, அங்குள்ள சில வங்கிகள் குற்றஞ்சாட்டின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X