அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்கு தயாராகிறார் ரஜினி: தமிழ் புத்தாண்டில் கட்சி அறிவிப்பு வெளியீடு

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (101+ 1)
Advertisement
தேர்தல், ரஜினி,கட்சிஅறிவிப்பு

தமிழகத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும்வகையில், நடிகர் ரஜினி சுறுசுறுப்பாகி உள்ளார். தமிழ் புத்தாண்டில், புதிய கட்சி குறித்தஅறிவிப்பை, அவர் வெளியிட உள்ளார். ஆகஸ்ட் மாதத்தில், தன் கட்சியின் மாநாட்டை நடத்தவும், செப்டம்பரில், கட்சி கொள்கை, கோட்பாடுகள் குறித்து, மாநிலம் முழுவதும்பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில், கூட்டணி குறித்து, பா.ம.க.,உள்ளிட்ட சில கட்சிகளுடன், ரஜினி தரப்பு திரைமறைவு பேச்சை துவக்கி உள்ளது.
தமிழக அரசியலில், ஆளுமை மிக்க தலைவர்களாக திகழ்ந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்த பின், அவர்கள் கோலோச்சிய இடத்திற்கு, வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்ற கருத்து, பரவலாக நிலவுகிறது. 'வெற்றிடத்தை நிரப்ப நாங்கள் இருக்கிறோம்' என, நடிகர்கள் ரஜினியும், கமலும், அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த லோக்சபா தேர்த லுக்கு முன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை கமல் துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.ரஜினி மக்கள் மன்றத்தை துவக்கி, லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்தும்,பூத் கமிட்டி அமைத்தும், உள்கட்டமைப்பு பணிகளை, வெற்றிகரமாக முடித்துள்ளார்.


ஆண்டு விழா


சமீபத்தில், சென்னையில் நடந்த, 'துக்ளக்' இதழின் ஆண்டு விழாவில் பங்கேற்ற ரஜினி, ஹிந்து எதிர்ப்பு கொள்கையையும், ஹிந்து தெய்வமான ராமர் சிலையை, ஈ.வெ.ராமசாமி தலைமை யில் நடந்த ஊர்வலத்தில் அவமதித்ததையும் கண்டித்து பேசினார். உடன், 'ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தி.க.,வினர் போராட்டம் நடத்தினர். ஆனால், 'நடத்த நிகழ்வுகளையே பேசினேன்; மன்னிப்பு கேட்க மாட்டேன்' என, தன் நிலைப்பாட்டில், ரஜினி உறுதியாக இருந்தார்.

அதேபோல, 'குடியுரிமை திருத்த சட்டத்தால், முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராது' என, மத்திய அரசுக்கு ரஜினி ஆதரவுக்கரம் நீட்டினார். இதனால், சில நாட்களாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.


சட்டசபை தேர்தல்

இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழ் புத்தாண்டான, வரும் ஏப்ரல், 14ல், தன் கட்சி குறித்தஅறிவிப்பை வெளியிட, ரஜினி திட்டமிட்டுள்ளார்.மதுரை அல்லது திருச்சியில், ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்தி, கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து, கொள்கைகளையும் வெளியிட உள்ளார். தொடர்ந்து, கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை விளக்குவதற்காக, செப்டம்பரில், தமிழகம் முழுவதும் மக்களைசந்தித்து, பிரசாரம் செய்ய உள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அனைத்து பணிகளையும், சத்தமின்றி ரஜினி முடுக்கி விட்டுள்ளார். அதற்காக, பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சையும், ரஜினி தரப்பு மேற்கொண்டு வருகிறது. இதை, உறுதிப்படுத்தும் வகையில், 'பா.ம.க.,வுடன், ரஜினி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது' என, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துஉள்ளார்.


மாற்றங்கள் நிகழும்


தமிழருவி மணியனின் இந்தக் கருத்து, தி.மு.க., மேலிடத்தில், அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி தொகுதி தி.மு.க., - எம்.பி.,செந்தில்குமார், 'டிவி' சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில், 'யார் முதல்வர் வேட்பாளர்; அன்புமணி முதல்வர்வேட்பாளர் இல்லையா...' என, எதிர்கேள்வி எழுப்பி, ரஜினி, அன்புமணி இடையே சிண்டு முடித்துள்ளார்.

இது குறித்து, அரசியல் விமர்சகர்கள் கூறுகை யில், 'சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையில், ரஜினியை சுற்றி அரசியல் ஆட்டம் துவங்கி விட்டது.'அடிப்படை பணிகளை எல்லாம் சத்த மின்றி முடித்துவிட்டு, ரஜினி களத்திற்கு வருவதால், தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழும்' என்கின்றனர்.


துாதர் நடத்திய கூட்டணி பேச்சு


அரசியல் விமர்சகர் ஒருவர் வாயிலாக, அன்புமணியுடன் நடிகர் ரஜினி பேசியுள்ளார். 'தமிழக அரசியலில், ராமதாஸ் மூத்த தலைவர். தி.மு.க.,வில், சமூக நீதி மறுக்கப்படுகிறது; ராமதாஸ் சமூக நீதியை பெற்றுத்தர போராடி வருகிறார். அவருடன் இணைந்து, நானும் சமூக நீதி கிடைக்க பாடுபடுவேன்; சட்டசபைத் தேர்தலில் இணைந்து பணியாற்ற தயார்' என, ரஜினி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

'ரஜினியுடன், பா.ம.க., இணைந்து தேர்தலை சந்தித்தால், வட மாவட்டங்களில், அனைத்து ஜாதிகளின் ஓட்டுக்களும், பா.ம.க.,வுக்கு கிடைக்கும்; 90 சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்கலாம்' என, அன்புமணி கருதுகிறார். இதேபோல, ரஜினியின் துாதரும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசி வருகிறார்.

அதனால், ரஜினி கட்சி துவங்கியதும், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியில் இருந்து, சில கட்சிகள் வெளியேறி, ரஜினி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (101+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-பிப்-202000:00:54 IST Report Abuse
தமிழ்வேல் சுறுசுறுப்பா....? அப்போ இமயமலைப் பக்கம் போயிட்டு வந்திருப்பாரா...🤔
Rate this:
Share this comment
Cancel
அருண் பிரகாஷ் சென்னை அந்த காலத்தில் அனைத்து அரசு வேலைகளும் ஆரியர் வசம்,அதை எதிர்த்து திமுக இன்று தமிழ்நாட்டின் முதல்வரை தீர்மானிக்க ஒரு ஆரியரின் ஆலோசனை கேட்டால் என்ன அர்த்தம்,அந்த முதல்வரை விட அவரை உருவாக்கும் ஆரியர் அறிவாளி என்றே அர்த்தம்,அப்புறம் என்ன ___க்கு அவருக்கு முதல்வர் ஆசை.அறிவு இல்லாதவர் முதல்வரா???
Rate this:
Share this comment
Cancel
10-பிப்-202022:38:08 IST Report Abuse
கணேசன்     பெங்களூர் ரஜினிக்கு ஒரு ஆசை அவரை பற்றி தினமும் செய்திகள் TV பேப்பர் ஊடகங்களில் பரபரப்பாக வரவேண்டும் மக்கள் எப்போதும் தான் சொல்வதை பற்றி பேசவேண்டும் TV யில் தன்னை தான் சொல்வதை விவாதிக்க வேண்டும் அப்படியே தமிழ் நாட்டு மக்கள் முழுவதும் தன் பின்னால் நிற்பதை போல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்று ரஜினி நினைக்கிறார் TV யும் நியூஸ் பேப்பர் அவரை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் ரஜினி ஆட்டம் முடிவுக்கு வரும் மேடையில் மூலையில் நாற்காலி போட்டு சிவாஜி பாக்யராஜ் T ராஜேந்தர் விஜய் காந்த் கமல் எல்லோரையும் உக்கார்த்தியாச்சு ரஜினியையு ம் மூலையில் உட்கார்துவார்கள் அடிப்பார்கள் ரஜினிக்கு அதிகபட்சம் 5 சதவீத வோட்டு இருக்கும் இவரை 30 சதவிகித வோட்டு இருக்கும் திமுக அதிமுக வுடன் COMPARE பண்ணுவது தவறு
Rate this:
Share this comment
SIVA - chennai,இந்தியா
11-பிப்-202008:41:27 IST Report Abuse
SIVAரஜினி போட்டோவ அட்டைப்படத்துல போட்டு தான் 25 வருசமா நிறைய பத்திரிக்கைங்க பணம் பண்ணினாங்க அவர்களை வைத்து இவர் பணம் சம்பாதிக்கல...
Rate this:
Share this comment
renga - KARUR,இந்தியா
13-பிப்-202013:53:39 IST Report Abuse
rengaஉண்மை. ஊடகங்கள் தான் இவரை வைத்து பிழைத்தன. நல்ல மனிதன் இவர் வந்தால் வரவேற்போம். சில மேதாவிகள் வேற எவனையும் கேள்வி கேக்க துப்பில்லாமல் ரஜினியை சீண்டுவார்கள். அவர் எதுவும் கண்டுகொள்ளாமல் வெற்றி பெற்று கொண்டிருக்கிறார். வாழ்க தமிழகம் வளர்க நல்லோரின் ஆட்சி. ஜெய்ஹிந்த்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X