பொது பாதுகாப்பு சட்டம் ஒமர் மீது பாய்ந்தது ஏன்?

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஸ்ரீநகர் : ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.latest tamil newsஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆகஸ்டில் மத்திய அரசு ரத்து செய்தது.


விமர்சனம்


முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி ஆகியோர், கைது செய்யப்பட்டுவீட்டுக் காலவில் வைக்கப்பட்டனர். பரூக் அப்துல்லா மீது, பொது பாதுகாப்பு சட்டம் ஏற்கனவே பாய்ந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை, ஓராண்டு வரை சிறையிலோ அல்லது தடுப்புக் காவலிலோ விசாரணையின்றி வைக்க முடியும். இந்நிலையில், ஒமர்அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அவர்கள் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம், சமீபத்தில் அறிவித்தது; இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


latest tamil newsஇந்நிலையில், இருவர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததற்கான காரணம் குறித்து,அதிகாரிகள் கூறியுள்ளதாவது: கடந்த ஜூலையில், தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டம்நடந்தது. அப்போது, ஒமர் அப்துல்லா, 'ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால், அதற்கு எதிராக போராட்டம் நடத்த இளைஞர்களை திரட்ட வேண்டும்' என,கூறியிருந்தார். ஒமர் அப்துல்லா, முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இளைஞர்களை துாண்டும் வகையில், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதனால், நாட்டுக்கு எதிராக, இளைஞர்களை, அவர் திரட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.


latest tamil news
ஆதரவு


மெஹபூபா முப்தி, தடை செய்யப்பட்ட, ஜமாத் - இ - இஸ்லாமியா அமைப்பினருக்குதொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வந்தார். மேலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால், அந்த பிராந்தியம் இந்தியாவுடன் இருக்காது என்பது போல், பிரிவினைவாதத்துக்கு ஆதரவாக பேசி வந்தார். இதன் காரணமாகவே, இவர்கள் இருவர் மீதும், பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
10-பிப்-202014:54:27 IST Report Abuse
Rasheel 70 ஆண்டு காலமாக சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர் காஷ்மீரி மாணவன் இந்தியா முழுவதும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் மற்ற மாநில மாணவர்கள் அங்கு சேர்ந்து படிக்கச் முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு ஒரு சென்ட் நிலம் வாங்க முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் வணிகம் செய்யலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு வணிகம் செய்ய லைசென்ஸ் கிடைக்காது. ஆண்டுக்கு மத்திய அரசு உதவி 90000 கோடி ரூபாய். ஆனால் வளர்ச்சி கிடையாது. தாழ்த்த பட்டவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. முக்கியமான தொழில் கல் எறிவது. பொது சொத்தை சேதப்படுத்துவது. இதை எல்லாம் ஒரு மதம் சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர்? வெட்க கேடு
Rate this:
Share this comment
santha kumar - ruwi,ஓமன்
10-பிப்-202015:20:35 IST Report Abuse
santha kumarஉங்கள் வரலாற்று அறிவை பார்த்து பரிதாபப்படுகிறேன். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்திய சுதந்திரம் வாங்கிய சமயத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் சேர வில்லை. அதற்க்கு அரசர் ஹரி முடியாது என்று சொன்னார். பிறகு சில மாதத்திற்குள் காஷ்மீர் disputed land காக பாக்கிஸ்தான் காஸ்மீர் மன்னரரிடம் சண்டை போட்டார். மன்னர் ஹரி க்கு தெரியும் சண்டை போட்டால் தோற்று போவம் என்று, அந்த சமயம் பார்த்து இந்தியாவின் உள்துறை அமைச்சர் படேல் ஹரி யை சந்தித்து ஒப்பந்தம் செய்தனர். அதுதான் 370 . அதில் காஸ்மீர் இந்தியாவுடைய பகுதி என்று சொல்லலாம் தவிர சொந்தம் கொண்டாட முடியாது. அப்படி சொந்தம் கொண்டாட மட்டும் காஷ்மீர் கு பாதுகாப்பு மற்றும் சில வசதிகளை இந்திய அரசு செய்து கொடுக்க வேண்டும். இது தெரியாமல் காஷ்மீர் ஏதோ தமிழ் நாடு கேரளா போல் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க பட்ட பகுதி போல் நினைக்கிறார்ர்கள் . எழுதி வைத்துக்கொள்ளுங்கள், மோடி யின் இந்த முடிவு அதாவது 370 யை நீக்கியது என்றைக்காவது ஒரு நாள் பெரிய பிரச்சனை வரும் ....
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
10-பிப்-202014:04:40 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ராணுவத்துக்கு எதிராக மக்களை தாக்குதல் நடத்த தூண்டிய ஆள் தன்சுகபோக வாழக்கை அனுபவித்து கொண்டு நாட்டுக்கு எதிராக சதி செய்த ஆள் /.பெரிய மன்னர் பரம்பரை என்று நினைப்பு. ..அற்ப வாழ்க்கைக்கு ஆசை பட்ட கூட்டம்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-பிப்-202013:37:57 IST Report Abuse
Malick Raja முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் .. அனுபவிக்கும்போது மட்டுமே தெரியவரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X