துணை ராணுவப் படை அதிகாரிகள் தேர்வு ; ஐ.ஏ.எஸ்., தேர்வுடன் இணைக்க திட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

புதுடில்லி : துணை ராணுவப் படைகளில் அதிகாரிகளுக்கான தேர்வை, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுடன் இணைப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட மத்திய ஆயுத போலீஸ் படைக்கான அதிகாரிகள் தேர்வை, யு.பி.ஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.கடந்த, 2003ல் இருந்து நடத்தப்படும் இந்த தேர்வுகளில் மாற்றம் செய்வது குறித்து, கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அதிகாரிகள் பதவியை, அமைப்பு சார் குரூப் - ஏ சேவை பதவிகளாக, மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதன் மூலம், இந்தப் பதவிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வது, பணி உயர்வு, சம்பளம் உள்ளிட்ட விவகாரங்கள் சீரமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., எனப்படும் இந்திய குடிமைப் பணிகள் பதவிக்கு நடத்தப்படும் தேர்வுகளுடன், துணை ராணுவப் படை அதிகாரிகளுக்கான தேர்வை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.இது தொடர்பாக அமைக்கப்பட்ட, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலை குழுவும் சில ஆலோசனைகள் அளித்துள்ளது. இது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X