ஒடிசாவில் ஓடும் பஸ்சில் தீ 9 பேர் பலி; 22 பேர் காயம்

Added : பிப் 09, 2020
Advertisement

பெர்ஹாம்பூர் : ஓடிசாவில் உயர் அழுத்த மின் ஒயர் மீது உரசியதில், பஸ்சில் தீப்பிடித்தது. இதில், ஒன்பது பேர் உடல் கருகி இறந்தனர்; 22 பேர் காயம் அடைந்தனர்.

ஓடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள, கஞ்சம் மாவட்டம், ஜங்கல்படுவிலிருந்து, சிக்காராடா நோக்கி, பஸ் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. கோலன்தரா பகுதியில் வந்த போது, மேலே தொங்கி கொண்டிருந்த உயர் அழுத்த மின் ஒயர் மீது, பஸ் உரசியது. இதையடுத்து, மின்சாரம் பாய்ந்து, பஸ்சில் தீப்பிடித்தது. பஸ்சில் இருந்த பயணியர் அலறியடித்து தப்பிக்க முயற்சித்தனர். சிலர் பஸ்சுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இதில், ஒன்பது பேர், பஸ்சுக்குள் உடல் கருகி இறந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக், அவர்களின் குடும்பத்துக்கு தலா, 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என, அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X