மசூதிக்குள் நாயுடன் நுழைந்த பெண்ணுக்கு மன்னிப்பு| Dinamalar

மசூதிக்குள் நாயுடன் நுழைந்த பெண்ணுக்கு மன்னிப்பு

Added : பிப் 09, 2020
Share

ஜகார்த்தா : இந்தோனேசிய மசூதிக்குள், நாயுடன் நுழைந்த, மனநல பாதிப்புக்கு உள்ளான கிறிஸ்தவ பெண்ணை, அந்நாட்டு நீதிமன்றம் மன்னித்தது.

தென்கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவுக்கு அருகே, போகோர் நகரம் உள்ளது. கடந்த ஆண்டு, சுசேதே மார்கரத், 52, என்ற கிறிஸ்தவ பெண், இங்கேயுள்ள ஒரு மசூதிக்குள்,'ஷூ' அணிந்து, நாயுடன் நுழைந்தார். இஸ்லாமிய மதத்தில், நாய் துாய்மையற்ற விலங்காக கருதப்படுகிறது. மேலும், அந்தப் பெண், ஷூ அணிந்தபடி மசூதிக்குள் நுழைந்தது விலக்கப்பட்ட செயலாக பார்க்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பான விசாரணை, போகோர் நகர நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில், அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட மார்கரத்தை, நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. எனினும், விசாரணையில், மார்கரத் மனநல பாதிப்புக்கு உள்ளானவர் என, தெரிய வந்ததால், அவருக்கு, நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை, அவர் தரப்பு வழக்கறிஞர் வரவேற்றார். எதிர் தரப்பு வழக்கறிஞர்கள், அப்பெண்ணுக்கு, குறைந்த பட்சம், ஒன்பது மாத சிறை தண்டனை வழங்கி யிருக்க வேண்டும் என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X