ஆப்கன் வீரர் திடீர் தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி

Added : பிப் 09, 2020
Advertisement

காபூல் : ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், அந்நாட்டு ராணுவ வீரர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அமெரிக்க வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் காயமடைந்தனர்.


டிரம்ப் ஆர்வம்



ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இங்கு பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில், 18 ஆண்டுகளுக்கு மேலாக, அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு உள்ளது.ஆப்கன் மற்றும் அமெரிக்க வீரர்கள் இணைந்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க வீரர்களை முழுமையாக ஆப்கனிலிருந்து வாபஸ் பெறும் முயற்சியில், அதிபர் டொனால்டு டிரம்ப் ஆர்வமாக உள்ளார். இந்நிலையில், ஆப்கனின் நங்கர்கார் மாகாணம், செர்ஷாத் மாவட்டத்தில், அமெரிக்க - ஆப்கன் வீரர்கள், நேற்று முன்தினம் இரவு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆப்கன் ராணுவ உடையணிந்த ராணுவ வீரர் ஒருவர், திடீரென அமெரிக்க வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே, தான் வைத்திருந்த துப்பாக்கியால், அமெரிக்க வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். வீரர்கள் படுகாயம்இதில், அமெரிக்க வீரர் இருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். ஆப்கன் வீரர்கள் சிலரும், இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும், இதுவரை பொறுப்பேற்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X