பபுவா கினியாவில் பூகம்பம்சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு அருகே, பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள, பபுவா நியூ கினியாவில், நேற்று பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில், 6.2 அளவுக்கு இது பதிவானது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உடனடி தகவல் கிடைக்கவில்லை.மின்னல் தாக்கி 4 கொரில்லா பலிகம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் உள்ள உயிரியல் பூங்காவில், அரிய வகை மலை கொரில்லாக்கள் நான்கு உயிரிழந்தன. மின்னல் தாக்கி இவை இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற மலை கொரில்லாக்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.தீ விபத்தில் தாய், 6 குழந்தைகள் பலிகிளின்டன்: அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் கிளின்டன் பகுதியில், ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பள்ளி ஆசிரியையாக உள்ள, 33 வயது பெண் மற்றும் அவருடைய, 15, 13, 12, 6, 4, 1 வயது குழந்தைகள் உயிரிழந்தனர். பிரிட்னியின் கணவர் காயத்துடன் உயிர் தப்பினார்.உருகும் பனிப்பாறைகள்லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆர்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவது குறித்து, விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். 'கடலுக்கு அடியில் இயற்கையாக இருக்கும் மின்சக்தியால்தான், ஐரோப்பிய நாடுகளில் மிதமான வெப்பநிலை நிலவுகிறது. பனிப்பாறை உருகுவதால், இதில் மாற்றம் ஏற்பட்டு, அது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்' என, அமெரிக்காவைச் சேர்ந்த கடல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE