அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாக அமெரிக்கவாழ் இந்திய மேயர் தீவிரம்

Added : பிப் 09, 2020
Advertisement
 அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாக அமெரிக்கவாழ் இந்திய மேயர் தீவிரம்

வாஷிங்டன் : அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்தில் இருந்து, செனட் சபைக்கு தேர்வாக, அமெரிக்கவாழ் இந்தியரும், மன்ஹாட்டன் மேயருமான உஷா ரெட்டி தீவிரம் காட்டி வருகிறார்.அமெரிக்காவின், கான்சஸ் மாகாண செனட்டராக, குடியரசு கட்சியை சேர்ந்த பேட் ராபர்ட்ஸ் பதவி வகித்து வருகிறார்.

செனட் சபைக்கான தேர்தல், வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. 'கான்சஸ் மாகாணத்தில், மீண்டும் போட்டியிட திட்டம் இல்லை' என, பேட் ராபர்ட்ஸ் தெரிவித்துவிட்டார். கடந்த, 1932ம் ஆண்டு முதல், இந்த மாகாணத்தில் போட்டியிட்ட, ஜனநாயக கட்சியை சேர்ந்த யாரும், செனட் சபைக்கு தேர்வாக வில்லை.இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியான, உஷா ரெட்டி, 54, கான்சஸ் மாகாண செனட் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இவருடன், ஜனநாயக கட்சி சார்பில், மேலும் நான்கு பேர் களமிறங்கி உள்ளனர்.

இவர்களில், ஒருவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஆகஸ்ட், 4ல் நடைபெறுகிறது. இதன் பிரசாரத்திற்காக, உஷா ரெட்டி, 71.3 லட்சம் ரூபாய் நிதியை திரட்டியுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் பிறந்த உஷா ரெட்டி, 1973ம் ஆண்டு, தன் பெற்றோருடன், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 2016-2017ல், மன்ஹாட்டன் மேயராக பதவி வகித்தார். அவர் மீண்டும் வெற்றிபெற்று, ஜனவரி, 7ம் தேதி, மன்ஹாட்டன் மேயராக, இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X