செய்தி சில வரிகளில்...

Added : பிப் 09, 2020
Advertisement

எல்லையில், பாக்., தாக்குதல்ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்கள் மீது, பாக்., ராணுவம் பீரங்கி தாக்குதலில் ஈடுபட்டது. தொடர்ந்து, இரண்டாவது நாளாக நடந்த இந்த தாக்குதலில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.காஷ்மீரில் மொபைல் சேவை, 'கட்'ஸ்ரீநகர் : பார்லிமன்ட் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட முகமது அப்சல் குருவின் நினைவு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீரில், மொபைல் இன்டர்நெட் சேவைதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் மரணம்கொச்சி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த, 'பிரசாரக்' பி. பிரமேஸ்வரன், 93, கேரள மாநிலம் பாலக்கோட்டில், நேற்று மரணமடைந்தார். பாரதிய ஜன சங்கத்திலும் பணியாற்றியுள்ள இவர், பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகளை பெற்றுள்ளார்.வங்கதேசத்தவர் கைதுஜான்சி: உத்தர பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில், உரிய ஆவணங்கள் இல்லாத, நமது அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த, ஏழு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.முக கவசத்துக்கு தடை நீக்கம்புதுடில்லி: நமது அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, முக கவசம், கையுறை உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், முக கவசம் மற்றும் கையுறைகளுக்கான தேவை, சீனாவில் அதிகரித்துள்ளதால், அந்த இரண்டு பொருட்களுக்கான தடை மட்டும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.அகிலேஷ், 'காணவில்லை'அசம்கர்க்: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், அசம்கர்க் தொகுதியின், எம்.பி.,யாக உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காததால், 'அகிலேஷ் யாதவ் காணவில்லை' என, காங்., சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.25 லட்சம் பேர் புனித நீராடல்பிரயாக்ராஜ்: 'மக' மாத பவுர்ணமியையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கை நதியின் திரிவேணி சங்கமத்தில், 25 லட்சம் பேர் நேற்று புனித நீராடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X