வெளிநாட்டு நிறுவனத்துக்கு ரகசியம் விற்பனை ஆந்திர உளவுத்துறை அதிகாரி மீது நடவடிக்கை

Added : பிப் 10, 2020
Advertisement

திருப்பதி : போலீசாரின் பாதுகாப்பு விதிமுறைகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தெரிவித்ததாக, ஆந்திர மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி வெங்கடேஸ்வரராவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடந்து வருகிறது. ஆந்திர அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ரகசியங்கள் நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் முக்கியமானவை. அதுகுறித்த ரகசியங்கள், அரசிற்கு தவிர மற்ற எவருக்கும் தெரியபடுத்தக்கூடாது. ஆனால், ஆந்திர மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியாக செயல்பட்ட வெங்கடேஸ்வரராவ், அரசின் நிபந்தனைகளை மீறி, வெளிநாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு, ஆந்திர காவல்துறை பாதுகாப்பு விதிமுறை விவரங்களை அளித்துள்ளார்.


பறிமுதல்


அவரின் மகன் சேதன் சாய்கிருஷ்ண நிறுவனம் வாயிலாக, மிக முக்கியமான பாதுகாப்பு கருவிகள், இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் அவரின் நிறுவனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேலை சேர்ந்த பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துடன் இணைந்து, அவர் நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை நிபந்தனைகளை மீறி கொள்முதல் செய்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், இது குறித்த முதற்கட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இது தேச துரோகம்.

வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து, தரமற்ற உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதனால், மாநில பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காவல்துறையை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. நிபந்தனைஅதிகாரபூர்வமாக கொள்முதல் அம்சத்தை நிறைவேற்ற, தன் மகன் பெயரில் போலி நிறுவனம் ஒன்றை அவர் துவங்கியதாக ஆந்திர அரசு உறுதி செய்துள்ளது. மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யும் போது, மத்திய உள்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளில், முன் அனுமதி பெறவில்லை.

உபகரணங்கள் கொள்முதலுக்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன.அதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் விஜயவாடா விலிருந்து எங்கும் வெளியில் செல்லக்கூடாது எனவும், நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.ஆனால், ஆந்திர அரசு சுமத்திய குற்றச்சாட்டுகளை வெங்கடேஸ்வரராவ் மறுத்துள்ளார். குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X