தாய்லாந்து வணிக வளாகத்தில் வெறித்தாக்குதல்

Added : பிப் 10, 2020
Advertisement

நாகோன் ராட்சசீமா : தாய்லாந்தில் உள்ள வணிக வளாகத்தில், ராணுவ வீரர் ஒருவர் நடத்திய தாக்குதலில், சிறுவன் உள்ளிட்ட, 26 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய ராணுவ வீரரை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின், நாகோன் ராட்சசீமா என்ற நகரத்தில், பிரபல வணிக வளாகம் உள்ளது. நேற்று முன்தினம், அந்த வணிக வளாகத்தின் வெளியே, ஒரு கார் வந்து நின்றது.அந்த காரில் இருந்து இறங்கிய ஒரு ராணுவ வீரர், யாரும் எதிர்பாராத விதமாக, அங்கிருந்தவர்கள் மீது, கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். பீதியடைந்த மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்து ஓடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, பாதுகாப்புப் படையினர், அந்த ராணுவ வீரரை பிடிக்க முயன்றனர்.தாக்குதல் நடத்திய வீரருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. ஆனால், அந்த ராணுவ வீரர், வெறித்தனமாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டார். 17 மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில், நேற்று காலை, அந்த ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட அந்த ராணுவ வீரரின் பெயர், ஜக்ரபந்த் தொம்மா என, தெரியவந்தது.

அவர், தன் தனிப்பட்ட பிரச்னை காரணமாக, இந்த தாக்குதல் நடத்தியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராணுவ முகாம் மற்றும், ராணுவ வாகனங்களில் இருந்து திருடப்பட்ட துப்பாக்கிகள் மூலம், இந்த தாக்குதலை அவர் நடத்தியுள்ளதாக தெரிய வந்து உள்ளது.ஜக்ரபந்த் நடத்திய, இந்த கண்மூடித்தனமான தாக்குதலில், 13 வயது சிறுவன், பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட, 26 பேர் உயிரிழந்தனர். இைத, உறுதிபடுத்தியதாய்லாந்து பிரதமர் பிரயுத் ஷானோஷா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X