தேசியம்

Added : பிப் 10, 2020
Advertisement
 தேசியம்

வழிமுறைகள் உண்டு!

சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வரி நிர்வாகம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான சில வழிமுறைகளை அறிவிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப உதவியுடன் தான், இதை செயல்படுத்த முடியும். இந்த விஷயத்தில், தொழில் துறையினருடனும், வர்த்தகத் துறையினருடன் தொடர்ந்து ஆலோசிக்க, மத்திய அரசு தயாராக உள்ளது.

நிர்மலா சீதாராமன் , மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,

சுயநல அரசியல்!

மிகச் சிறந்த துறவியும், கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான ரவிதாசர், 14ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள், உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சி செய்தபோது, ரவிதாசரை போற்றும் வகையில் எதையும் செய்யவில்லை. ஆனால், தற்போது சுயநல மற்றும் ஓட்டு வங்கி அரசியலுக்காக, இந்த கட்சி தலைவர்கள் ரவிதாசர் ஜெயந்திக்கு வருகின்றனர்.

மாயாவதி , தலைவர், பகுஜன் சமாஜ்

சேவை செய்யுங்கள்!
இந்தியாவுக்காக சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள், ஹிந்து சமூகத்தினருடன் இணைந்து, அவர்கள் அதிகாரம் பெறுவதற்காக சேவையாற்ற வேண்டும். இந்த நாட்டை, ஹிந்துக்களிடமிருந்து எப்போதுமே பிரிக்க முடியாது. ஹிந்துக்கள் தான், இந்த தேசத்தின் மையப் புள்ளிகள். ஹிந்து மதத்துக்கு சேவை செய்ய, யாரும் தயக்கம் காட்டக் கூடாது.

சுரேஷ் பையாஜி ,பொதுச் செயலர், ஆர்.எஸ்.எஸ்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X