பொது செய்தி

இந்தியா

விரைவில் வௌியாகிறது கலாம் வாழ்க்கை சினிமா

Added : பிப் 10, 2020
Advertisement

புதுடில்லி : முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

முன்னாள் ஜனாதிபதி கலாமின் வாழ்க்கை வரலாறு, ஏ.பி.ஜே.அப்துல் கலாம்: தி மிசைல் மேன் என்ற பெயரில், திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. ஹாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் கூட்டு முயற்சியான இந்த படம், 2020 இறுதிக்குள் வெளியிடப்படும் என, தெரிகிறது.இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின், முதல் போஸ்டரை, டில்லியில் நடந்த விழாவில், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், வெளியிட்டார்.இந்த திரைப்படத்தில், பிரபல தென்னக நடிகர் அலி, அப்துல் கலாம் வேடத்தில் நடிக்கிறார்.

படத்தை, ஜகதீஷ் தானேட்டி, சுவர்ணா பப்பு மற்றும் மார்டினி பிலிம்ஸ் சார்பில், ஜானி மார்டின் ஆகியோர் தயாரிக்கின்றனர்.மார்டினி பிலிம்ஸ் நிறுவனம், பல கோடி ரூபாய் செலவில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X