பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் படிப்பதை நிறுத்தக் கூடாது

Added : பிப் 10, 2020
Advertisement
 மாணவர்கள் படிப்பதை நிறுத்தக் கூடாது

கடலுார்:மாணவர்கள் பட்டம் பெற்றதோடு படிப்பதை நிறுத்த கூடாது. படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் எழிலன் பேசினார்.
கடலுார் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 26வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லுாரி செயலர் பீட்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் சேவியர், கல்விப்புல முதன்மையர் அலெக்ஸ், பேராசிரியை ஜேம்ஸ் மேரி உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.திருவள்ளுவர் பல்கலைக்கழக வேலுார் மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் எழிலன், தங்கப் பதக்கம் பெற்ற 20 மாணவ,மாணவிகள் உள்பட 1,461 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:மாணவர்கள் பட்டப்படிப்பு, மேல் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு போன்றவற்றை முடித்தாலும், படிப்பதை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து படிக்க வேண்டும். கல்வி தான் வாழ்க்கையை மேம்படுத்தும். அரசியல் தலைவர்களில் அண்ணாதுரை சிறந்த கல்வியாளர். சென்னை கன்னிமாரா நுாலகத்தில் உள்ள அனைத்து புத்தங்களையும் படித்து முடித்துள்ளார். இவரின் தொடர் படிப்பு, அவரை உயர்த்தி அறிஞராக நாட்டிற்கு அடையாளம் காட்டியது. பாரதியார் போன்றவர்கள் பெண்களின் கல்விக்கு பாடுபட்டனர். மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை தொடர வேண்டும். புத்தக கண்காட்சிக்கு செல்லுங்கள். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு மினி நுாலகம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வெற்றி பெற்றவர்களின் புத்தகங்களை படித்தால், அவர்கள் எத்தனை முறை தோல்வியுற்றனர் என தெரிய வரும். தொடர்ந்து படித்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். மாணவர்கள் படிப்புடன் சமூகப் பணியில் ஈடுபடவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X