ஆரோவில்லில் மராத்தான் ஓட்டம் பல்வேறு நாட்டினர் உற்சாகம்

Added : பிப் 10, 2020
Advertisement

புதுச்சேரி : ஆரோவில் சர்வதேச நகரில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 2ம் ஞாயிற்றுக்கிழமை அன்று மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான 13-வது மராத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகள் 42.195 கி.மீ., 21.1 கி.மீ., 10 கி.மீ., என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன.இதில் 42.195கி.மீ., துார போட்டி விடியற்காலை 5:00 மணிக்கும், 21.1 கி.மீ., போட்டி காலை 6:15 மணிக்கும், 10 கி.மீ., போட்டி காலை 7:00 மணிக்கு தொடங்கின.

ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுடன், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து என மொத்தம் 6,000 பேர் பங்கேற்றனர்.ஆரோவில் மையப்பகுதியான மாத்திர் மந்திர் பகுதியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் கோட்டக்கரை, இடையஞ்சாவடி, குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம் வழியாக நடைபெற்றது. 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு முதலுதவி மையங்களும், 1.5 கி.மீ., துாரத்திற்கு ஒரு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.மராத்தான் ஓட்டத்தில் சென்னை முன்னாள் மேயர்சுப்ரமணியன் இலக்கை அடைந்தார். அவரை பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.தமிழக போலீஸ் ஐ.ஜி., முருகன் இலக்கை தொட்டவர்களை பாராட்டினார்.

ஆரோவில் சர்வதேச மராத்தான் போட்டி பரிசுக்காக நடத்தப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய உடல் திறனை சோதித்துகொள்ள ஒரு வாய்ப்பாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X