சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

கடலுார்:குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவரையும், தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர்கள் தாஸ் (எ) அந்தோணி தாஸ், 34; தீபக் (எ) பரணி. இருவரும், அண்ணா நகர் டாஸ்மாக் கடை அருகில் சமத்துவபுரத்தை சேர்ந்த ஏழுமலையிடம், பணம் கேட்டு மிரட்டி தாக்கினர். குறிஞ்சிப்பாடி போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதில், தாஸ் (எ) அந்தோணி தாஸ் மீது கடலுார் முதுநகர், பண்ருட்டி காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. வடலுார் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 29; கடந்த 12ம் தேதி, நெத்தனாங்குப்பம் டாஸ்மாக் கடை அருகில் நண்பர்களுடன் மது அருந்தினார். அவ்வழியாக வந்த வடலுாரை சேர்ந்த ராம் (எ) ராம்குமார், 30; என்பவர் அய்யப்பனிடம் தகராறு செய்து, அவரை தாக்கினார். வடலுார் போலீசார், அவரை கைது செய்தனர். இவர் மீது வடலுார் காவல் நிலையத்தில் ரவடி பதிவேடு பராமரிக்கப்படுகிறது. கடலுார், பெரியகங்கணாங்குப்பம் அருகே கடந்த 27ம் தேதி, பைக்கில் 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்த ராமாபுரத்தை சேர்ந்த திருஞானம் (எ) திருஞானசம்பந்தம், 43; என்பவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர், மீது கடலுார் மதுவிலக்கு பிரிவில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.தாஸ் (எ) அந்தோணிதாஸ், ராம் (எ) ராம்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும், திருஞானம் (எ) திருஞானசம்பந்தத்தை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யவும் கலெக்டர் அன்புச்செல்வனுக்கு, எஸ்.பி.,ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.இதையடுத்து கடலுார் மத்திய சிறையில் தாஸ் (எ) அந்தோணிதாஸ், ராம் (எ) ராம்குமார் குண்டர் தடுப்பு சட்டத்திலும், திருஞானம் (எ) திருஞான சம்பந்தத்தை தடுப்பு காவல் சட்டத்திலும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X