பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை மாணவர்கள் பெல்லுடன் ஒப்பந்தம்

Added : பிப் 10, 2020
Advertisement

திருச்சி : ''தோட்டக்கலை கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 80 ஏக்கரில் தோட்டம் அமைக்கப்பட உள்ளது'' என்று தமிழக வேளாண்மை பல்கலை துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.

திருச்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 2 நாட்கள் நடந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:கோவை திருச்சி மதுரை மற்றும் துாத்துக்குடி ஆகிய இடங்களில் வேளாண்மை கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.

திருச்சியில் 24 தொகுதி வேளாண்மை துறை மாணவர்களும் 5 தொகுதி தோட்டக்கலை துறை மாணவர்களும் படித்து வெளியேறியுள்ளனர். அவர்கள் பல்வேறு அரசு பணிகளிலும் வங்கிப் பணியாளர்களாகவும் தொழில் முனைவோர்களாகவும் உள்ளனர்.'பெல்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தோட்டக்கலை கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 80 ஏக்கரில் பழத்தோட்டம் மற்றும் பூந்தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் கல்லுாரிகளில் படித்த மாணவர்கள் விவசாயம் சார்ந்த நவீன தொழில்நுட்ப பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கு 150 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு வரும் ஜூன் மாதம் முதல் 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக உலக வங்கி நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X