சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீப்பிடித்து எரிந்த அம்மன் தேர் திட்டக்குடி அருகே பரபரப்பு

Added : பிப் 10, 2020
Share
Advertisement
 தீப்பிடித்து எரிந்த அம்மன் தேர் திட்டக்குடி அருகே பரபரப்பு

பெண்ணாடம்:திட்டக்குடி அருகே மாரியம்மன் கோவில் தேர் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் தேர் திருவிழா நடைபெறும். கோவிலுக்கு சொந்தமான தேர் கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டு, கீற்றுகளால் கொட்டகையால் மூப்பட்டிருக்கும். இந்நிலையில், நேற்று மாலை 4:30 மணியளவில் மர்மமான முறையில் தேர் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. பொதுமக்கள் ஒன்று கூடி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில், கொட்டகை முற்றிலும் எரிந்து, தேர் சேதமடைந்தது. தேர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X