பொது செய்தி

தமிழ்நாடு

டவுன் பஸ் இயக்க கோரிக்கை

Added : பிப் 10, 2020
Advertisement

மங்கலம்பேட்டை:விருத்தாசலத்தில் இருந்து கட்டியநல்லுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்கலம்பேட்டை அடுத்த கட்டியநல்லுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள், மாணவர்கள் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர்.கிராமத்திற்கென டவுன் பஸ் இயக்கப்படாததால், 4 கி.மீ., துாரம் உள்ள கோ.பூவனுார் பகுதிக்கு நடந்து சென்று பஸ் ஏறிச் செல்கின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு தினசரி காலதாமதமாக செல்லும் நிலை உள்ளது.எனவே, விருத்தாசலத்தில் இருந்து கட்டியநல்லுாருக்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X