13 சவரன் நகை திருட்டு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

13 சவரன் நகை திருட்டு

Added : பிப் 10, 2020
Share

நடுவீரப்பட்டு:வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த மூலக்குப்பத்தை சேர்ந்தவர் மாயவேல்,53; விவசாயி. இவர் நேற்று முன்தினம் மனைவியுடன் உறவினர் திருமணத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீடு திறந்து கிடந்தது.வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, கம்மல், செயின் உள்ளிட்ட 13 சவரன் நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து நடுவீரப்பட்டு போலீசில் மாயவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நகையை திருடியவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X