பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதத்தில் விடுபடும் இளைஞர்கள் : கட்டுப்பாடுகளால் காஷ்மீரில் மாற்றம்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (21)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து, பயங்கரவாத அமைப்புகளில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது.






ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு அறிவித்தது.அதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும், பயங்கரவாத அமைப்புகளில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அந்த ஆய்வை மேற்கொண்ட பாதுகாப்பு முகமைகள், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடந்த, 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல், பயங்கரவாத அமைப்புகளில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. சராசரியாக, ஐந்து இளைஞர்கள், பயங்கரவாத குழுக்களில் தற்போது இணைகின்றனர். ஆனால், ஆகஸ்ட் மாதத்திற்கு முன், ஒவ்வொரு மாதமும், சராசரியாக, 14 இளைஞர்கள், பயங்கரவாத அமைப்புகளில் இணைந்தனர்.

பொதுவாக, பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்களில், ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி, பயங்கரவாத அமைப்புகளில், ஆள் சேர்க்கும் பணிகளில் ஈடுபடுவர்.ஆனால், இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், இறுதிச் சடங்குகளில், நெருங்கிய உறவினர்கள், 10-15 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். ஆகையால், அங்கு, இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளில் இணைக்க வழியில்லாமல் போனது.





இதேபோல், பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக்கொள்ளும் பயங்கரவாதிகள், தங்கள் குடும்பத்தினருக்காக கடைசியாக குரல் பதிவு ஒன்றை வெளியிடுவர். அவர்கள் வெளியிடும் அந்த பதிவு, பல இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் அமைந்திருக்கும். தற்போது விதிக்கப்பட்டுள்ள தொலைதொடர்பு கட்டுப்பாடுகளால், அதுபோன்ற சம்பவங்களும் நடக்கவே இல்லை.

பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெறும் சண்டையின்போது, நடக்கும் கல்வீச்சு சம்பவங்கள் தற்போது குறைந்துள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Citizen_India - Woodlands,இந்தியா
10-பிப்-202017:24:17 IST Report Abuse
Citizen_India எங்கப்பா இந்த தமிழ்நீதி. காற்று விட்டா கூட மோடியை குறை சொல்லும் தமிழ்நீதி
Rate this:
Share this comment
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
10-பிப்-202014:49:13 IST Report Abuse
Rasheel 70 ஆண்டு காலமாக சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர் காஷ்மீரி மாணவன் இந்தியா முழுவதும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் மற்ற மாநில மாணவர்கள் அங்கு சேர்ந்து படிக்கச் முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு ஒரு சென்ட் நிலம் வாங்க முடியாது. காஷ்மீரி இந்தியா முழுவதும் வணிகம் செய்யலாம். ஆனால் மற்ற மாநில மக்கள் அங்கு வணிகம் செய்ய லைசென்ஸ் கிடைக்காது. ஆண்டுக்கு மத்திய அரசு உதவி 90000 கோடி ரூபாய். ஆனால் வளர்ச்சி கிடையாது. தாழ்த்த பட்டவருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. முக்கியமான தொழில் கல் எறிவது. பொது சொத்தை சேதப்படுத்துவது. இதை எல்லாம் ஒரு மதம் சிகுலர் அரசியல்வாதிகள் நம்மை எப்படி ஏமாற்றி உள்ளனர்? வெட்க கேடு
Rate this:
Share this comment
Cancel
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
10-பிப்-202012:52:26 IST Report Abuse
குறையொன்றுமில்லை பாண்டியன் சென்னை என்கிற பண்டி சென்னை , எங்கய்யா இருக்க வந்து எதாவது உளறு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X