செய்தி சில வரிகளில்...

Added : பிப் 10, 2020
Advertisement

தாவூத் கூட்டாளி மும்பையில் கைதுமும்பை: மும்பை நிழல் உலக தாதாவாக செயல்பட்ட தாவூத் இப்ராகிமின் கூட்டாளி தாரிக் பர்வீன் மீது, மும்பை போலீசில், சமீபத்தில் கடத்தல் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தாரிக் பர்வீனை, போலீசார் நேற்று கைது செய்தனர். தொழில் அதிபரை கடத்தியதாக, தாரிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகளுக்குஒரே நேரத்தில் திருமணம்ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்த்தில், தன்னார்வ அமைப்பு சார்பில், மாற்றுத் திறனாளி ஜோடியினர், 47 பேருக்கு, நேற்று ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர்கள், வரதட்சணைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். இந்த மாற்றுத் திறனாளி மணமக்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி அளிக்கவும், தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராணுவத்தினருக்காகஒரு மாத பிரார்த்தனைசம்பா: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், கடந்தாண்டு பிப்ரவரியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 40 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு மாத சிறப்பு பிரார்த்தனை நடத்த, சம்பா மாவட்டத்தை பாலோவுரா கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.'பல்டி' அடித்த சுற்றுலா பயணி பலிபனாஜி: மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாலு ஷிண்டே, 40, கோவாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். கடற்கரையில் கால்பந்து விளையாடியபோது, 'பல்டி' அடித்து, பந்தை உதைக்க முயன்றார். அப்போது அவரது தலை, தரையில் பலமாக மோதியது. இதில், அவரது கழுத்தில் அடிபட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மருந்து நிறுவனங்களுக்கு கண்டிப்புபுதுடில்லி: மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டும் விதிமுறைகளை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, அபராதம் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X