கே.ஆர்.பி., அணையில் 2 ஷட்டர்கள் பொருத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையில் 2 ஷட்டர்கள் பொருத்தம்

Added : பிப் 10, 2020
Share

கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி., அணையில், இரண்டு ஷட்டர்கள் பொருத்தும் பணிகள் முடிந்து, 'வெல்டிங்' வைத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, கே.ஆர்பி., அணையின் பிரதான எட்டு ஷட்டர்களில், முதல் ஷட்டர், 2017 நவ., 29ல் உடைந்தது. 2018 ஆக., 14ல், ஒரு புதிய ஷட்டர் பொருத்தப்பட்டது. மற்ற ஏழு ஷட்டர்களையும் பொருத்தும் பணிகள், ஜன., 18ல் துவங்கின.இதற்காக, அணையின் மேல் பகுதியில், ஷட்டர்களை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஜன.31ம் தேதி, இரண்டு மற்றும் மூன்றாவது ஷட்டர் பொருத்தும் பணி துவங்கி, தற்போது முடிவடைந்துள்ளது.

'மற்ற ஷட்டர்கள் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருவதால், மே மாதத்துக்குள் பணிகள் முடிந்து விடும்' என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X