பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழக கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பர்'

Added : பிப் 10, 2020
Advertisement

ஆத்துார் : ''தமிழக கிரிக்கெட் வீரர்கள், இனி இந்திய அணியிலும் இடம் பெற, இந்த மைதானம் பயனாக இருக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில், நேற்று கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில்தான் விளையாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அரசு, பொதுத்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு, பொதுத்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை வெளியிடப்பட்டது.தமிழகத்தை சேர்ந்த மூன்று சர்வதேச வீரர்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக், ஆசியா, காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்கள், வீராங்கனைகளை கவுரவிக்க, ஊக்கத்தொகை, சிறந்த வீரர்களை உருவாக்க பயிற்சியளிக்கப்படுகிறது.இதுவரை, 925 வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு, 49.28 கோடி ரூபாயில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக், சர்வதேச போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள, 12 வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, சிறந்தவர்களுக்கு ஊக்கத்தொகை, ஆண்டுக்கு தலா, 25 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

1992ல், இளைஞர், விளையாட்டு பயிற்சி துறை, மாநில விளையாட்டு வாரியத்தை ஒருங்கிணைத்து, இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு இணையான, 'தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்' உருவாக்கப்பட்டது.இளைஞர்களை ஊக்கப்படுத்த, 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில், 76.23 கோடி ரூபாயில், 'அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்' தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், மூன்று அரங்கம் சில பிரச்னைகளால் பயன்பாடின்றி இருந்தது. அவற்றை சரி செய்துள்ளோம்.வாழப்பாடியில், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம், இப்பகுதியில் வசிக்கும் வீரர்களுக்கு வரப்பிரசாதம். கிரிக்கெட் வாரியத்தலைவராக இருந்த இந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன், கிரிக்கெட் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார். இம்மைதானத்தில், ஐ.பி.எல்., போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளதால், கட்டட வசதி உள்ளிட்டவைகளை, தமிழக அரசு செய்து கொடுக்கும். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில், 16 காளைகளை அடக்கிய வீரருக்கு, கார் வழங்கப்பட்டுள்ளது.

திறமையான வீரர்கள், தமிழகத்தில் உள்ளனர். அதனால், தமிழக கிரிக்கெட் வீரர்கள், இனி இந்திய அணியிலும் இடம் பெற, இந்த மைதானம் பயனாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, புதிதாக திறந்துவைக்கப்பட்ட மைதானத்தில், ராகுல் டிராவிட் பந்து வீச, முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்து மகிழ்ந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X