சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'காத்திருப்பில்' கனிமவள அதிகாரி மண் கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை

Added : பிப் 10, 2020
Advertisement

திருப்பூர் : திருப்பூரில் மண் கடத்தல் லாரியை விடுவிக்க வி.ஏ.ஓ.வை மிரட்டிய விவகாரத்தில்கனிமவள உதவி இயக்குனர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

ஜன. 24ல் திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் காட்டூர் வி.ஏ.ஓ. கார்த்திகேயன் உரிய ஆவணங்கள் இன்றி மண் கொண்டு சென்ற மூன்று லாரிகளை மடக்கிப் பிடித்தார்.அவரிடம் அலைபேசி யில் பேசிய பொங்கலுார்வருவாய் ஆய்வாளர்ஈஸ்வரி அந்த வாகனத்தைவிடுவிக்குமாறும் அவர்கள் தரப்பில்தாசில்தார் கலெக்டர் எல்லாரும் 'கவனிக்கப்படுகின்றனர்' எனவும் கூறியதோடு வி.ஏ.ஓ.வை மிரட்டும் தொனியிலும் பேசினார். இந்த உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவுப்படி டி.ஆர்.ஓ. சுகுமார் விசாரணை நடத்தினார்.

டி.ஆர்.ஓ. அளித்த அறிக்கையின் படி சில நாட்களுக்குமுன் வருவாய்ஆய்வாளர் ஈஸ்வரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.'வாகனங்களின் அனுமதி சீட்டுகளை உரிய வகையில் கண்காணிக்காதது ஏன்?' எனக் கேட்டு கனிம வள உதவி இயக்குனர் வள்ளல் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.இந்நிலையில் வள்ளல் திடீரென 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மதுரையில் பணிபுரிந்த வேடியப்பன் திருப்பூர் மாவட்ட கனிமவள துணை இயக்குனராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X