பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு மறுவரையறை 15ல் கருத்து கேட்பு

Added : பிப் 10, 2020
Advertisement

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இதில், கிராம ஊராட்சி வார்டுகள், ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு எல்லை வரையறை செய்யப்பட்டு, 1ம் தேதி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த முன்வரையறை சம்பந்தமாக, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், மனு அளித்து வருகின்றனர். இக்கருத்துகள் மீது, விவாதித்து முடிவு செய்ய, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்து கேட்பு கூட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில், 15ம் தேதி நடக்கிறது.

மாவட்ட மறுவரையறை அலுவலர் மற்றும் கலெக்டர் அ.ஜான்லுாயிஸ் தலைமையில், காலை, 10:00 மணிக்கு, நடக்கிறது. மக்கள் அவசியம் பங்கேற்று, கருத்து தெரிவிக்கலாம் என, கலெக்டர் ஜான்லுாயிஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X