பொது செய்தி

தமிழ்நாடு

சம்பாவை தொடர்ந்து பச்சை பயறு

Added : பிப் 10, 2020
Advertisement

பொன்னேரி : சம்பா அறுவடை பணிகள் முடிந்த நிலையில், விவசாயிகள் பச்சை பயறு வளர்ப்பதில், ஆர்வமாக ஈடுபட்டு உள்ளனர்.

மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்கு பின், விவசாயிகள் பச்சை பயறு, வேர்க்கடலை, தர்பூசணி என, நெல் பயிர் அல்லாத மாற்று விவசாயம் செய்கின்றனர்.தண்ணீர் தேவை குறைவாக உள்ள பச்சை பயறு பயிரிடுவதில், விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பனிப்பொழிவின் ஈரப்பதமே போதுமானதாக இருக்கும்.குறுகிய கால பயிரான இதற்கு, அதிகளவில் மருந்தினங்கள் செலவிட வேண்டியதில்லை. குறைந்த முதலீட்டில், நல்ல வருவாய் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் பச்சை பயறு பயிரிடுவதில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.

தற்போது, சம்பா அறுவடை பணிகள் முடிந்த நிலையில், விவசாயிகள் விளை நிலங்களை உழுது பதப்படுத்தி, பச்சை பயறு விதைகளை விதைத்து உள்ளனர். விதைத்த நாளில் இருந்து, 70 - 80 நாட்களில் பச்சை பயறு அறுவடைக்கு தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு, நான்கு மூட்டை கிடைத்தால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடந்த ஆண்டு, பூச்சி தாக்குதலால் பச்சை பயறு விவசாயிகளுக்கு, நஷ்டத்தினை ஏற்படுத்தியதால், இந்த ஆண்டாவது, தங்களுக்கு, நல்ல வருவாய் கிடைக்கும் என, நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X