சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : பிப் 10, 2020
Advertisement

துாக்கிட்டு ஒருவர் தற்கொலைமறைமலைநகர்: செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாசலம், 55. மனநிலை பாதிக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு மயங்கிய நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, வேதாசலம் இறந்தார்.

வாலிபர் கொலை மிரட்டல்மணவாள நகர்: மணவாள நகர் அடுத்த, வெங்கத்துார் கண்டிகையைச் சேர்ந்தவர், துலுக்கானம் மகன் ராம், 23. இவர், நேற்று முன்தினம், வெங்கத்துார் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவரை, அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள், வெங்கடேஷ், பெரியாண்டவர் மற்றும் ஹரிபாபு உள்ளிட்டோர், இரும்புத் தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில், காயமடைந்த ராம், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசாரை மிரட்டியவருக்கு 'காப்பு'வெள்ளவேடு: வெள்ளவேடு போலீசார், சித்துக்காடு அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாபிராமைச் சேர்ந்த, ஆதித்யன், 26 என்பவர், போலீசாரை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.இது குறித்து, வெள்ளவேடு போலீசில், தலைமை காவலர் சவரிதாஸ் அளித்த புகாரையடுத்து, போலீசார், ஆதித்யனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பெண்கள் மீது தாக்குதல்திருவள்ளூர்: திருவள்ளூர், எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், பிரபாகரன் மனைவி ராணி, 48. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும், நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது.இந்த நிலையில், கடந்த, 5ம் தேதி, வெங்கடேசன், ஜெயகுமார், வேலு மற்றும் சதீஷ் ஆகியோருடன், ராணி வீட்டிற்குச் சென்று, ராணியின் மகள் கோமதியை திட்டி, அடித்ததாக கூறப்படுகிறது. இதைத் தடுக்க வந்த அவரது தாயார் ராணி மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த உமா ஆகியோரையும் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.3 சிறுவர்கள் கைதுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், தோப்பு பகுதி வழியாக நேற்று காலை முதியவர் ஒருவர் நடந்து சென்றார்.அப்போது மூன்று சிறுவர்கள், முதியவர் அருகில் சென்று, இருக்கும் பணத்தை கொடு என, மிரட்டியுள்ளனர்.அவர் தர மறுக்கவும், பையில் இருந்த, 200 ரூபாயை பறித்து சென்றனர்.
சிவ காஞ்சி போலீசார், அந்த பகுதியில் சுற்றி திரிந்த மூன்று சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த 16 - 17 வயது உடையவர்கள் என, தெரிய வந்தது. அவர்களை கைது செய்து, செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X