பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பள்ளிக்கட்டடம்: எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

Added : பிப் 10, 2020
Advertisement
 புதிய பள்ளிக்கட்டடம்: எம்.எல்.ஏ., திறந்து வைப்பு

புவனகிரி:புவனகிரி ஒன்றியம், லால்புரம் மணலுாரில் ரூ.13.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட, பள்ளி கட்டடத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
புவனகிரி ஒன்றியம், லால்புரம் மணலுாரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி கட்டடம் பழுதடைந்தது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கையின் பேரில், பழுதடைந்த கட்டத்தை இடித்து விட்டு, ஒன்றிய பொது நிதி ரூ.13.20 லட்சம் ரூபாயில், பாண்டியன், எம்.எல்.ஏ., முயற்சியால் புதிய கட்டடம் கட்டப்பட்டது.இதற்கான திறப்பு விழாவிற்கு, ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி தலைவர் கோமதி சேரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சேர்மன் சிவப்பிரகாசம், துணை சேர்மன் வாசுதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.கடலுார் கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். ஊராட்சி செயலர் ஜெயசீலன், ஒன்றிய கவுன்சிலர் ராமதாஸ், கீழமூங்கிலடி ஊராட்சி தலைவர் சுடர்விழி அன்பரசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடனமயிலோன் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை ஜோதிமணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X