சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாய்க்கடிக்கு ஊசி இல்லாததால் நோயாளிகள் அலைகழிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

மந்தாரக்குப்பம்:கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாய்க்கடிக்கு ஊசி இல்லாததால், நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மந்தாரக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. தினசரி ஏராளமான மாணவர்கள், பெரியவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி இரவு, சிவாஜி நகர் பிரியா, 30, வடக்கு வெள்ளுர் சரோஜா, 31; உள்ளிட்ட 6 பேரை நாய்கடித்ததால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். நாய் கடிக்கு நான்கு ஊசிபோட வேண்டும் எனவும், இந்த மாதம் 5 , 8, 12, ம் தேதி, மார்ச் மாதம் 4 ம் தேதி தடுப்பூசி போட வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை சீட்டு எழுதி கொடுத்தனர்.கடந்த 5 ம் தேதி தடுப்பூசி போடப்பட்ட பின், நேற்று முன்தினம் காலை தடுப்பூசி போட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் சென்றனர். நாய்கடி மருந்து இருப்பு இல்லை எனவும், விருத்தாசலம், வடலுார், அரசக்குழி சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்லாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அங்கு சென்றால், எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டதோ, அங்கே செல்லுங்கள் என அலைகழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனர். இது குறித்து மாவட்ட சுகாதார துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X