பொது செய்தி

தமிழ்நாடு

கால்பந்து போட்டி

Added : பிப் 10, 2020
Advertisement

- -நமது நிருபர்- -மாநில அளவிலான கால்பந்து போட்டியில், திருத்தணி மற்றும் காஞ்சிபுரம் பில்லாபாங் பள்ளி மாணவ - மாணவியர், தங்கம், வெள்ளி, வெண்கலம் என, ஒட்டு மொத்தமாக, 60 பதக்கங்களை வென்றனர்.திருத்தணி அடுத்த, எஸ்.வி.ஜி.புரம் மற்றும் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பில்லாபாங் சர்வதேச பள்ளிகளின் மாணவர்கள், மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்றனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பில்லாபாங், காஞ்சிபுரம் மாணவியர் மற்றும் எஸ்.வி.ஜி.புரம் பில்லாபாங் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட, 20 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.இந்தப் போட்டியில், 26 தங்கம், 24 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கம் உள்ளிட்ட, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பில்லாபாங் மாணவர்கள் பெற்றுள்ளனர்.மாணவர்களின் இந்த வெற்றியை, பில்லாபாங் பள்ளி நிர்வாகம் கொண்டாடி வருகிறது. சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மாணவர்கள், பாராட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X