பொது செய்தி

தமிழ்நாடு

நெய்வேலியில் ரத்ததான முகாம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
 நெய்வேலியில் ரத்ததான முகாம்

நெய்வேலி:நெய்வேலி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 83வது ஆண்டு தினத்தையொட்டி, கம்மாபுரம் அரசு சுகாதார நிலையத்துடன் இணைந்து வங்கியின் சார்பில், ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
நெய்வேலி டவுன்ஷிப் மெயின் பஜாரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, மேலாளர் மாண்டேஷ் தவாதரே தலைமை தாங்கினார். கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புலிகேசி, கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறையின் மாவட்ட மேற்பார்வையாளர் டாக்டர் கதிரவன், என்.எல்.சி.,இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் பொது செயலர் அழகுராஜ், பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தனர்.கம்மாபுரம் வட்டார ஆலோசகர் தங்கமணி வரவேற்றார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி டாக்டர் குலோத்துங்கன் தலைமையில் மருத்துவக்குழுவினர் ரத்த தானம் பெற்றனர்.வங்கியின் உதவி மேலாளர்கள் சதீஷ்சிங், சாதிக்பாஷா, சுபஸ்ரீ, முதன்மை காசாளர் செல்வமணி மற்றும் அருண்குமார், ஜெயசீலன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X