பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆய்வக உதவியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்படுமா

Added : பிப் 10, 2020
Advertisement

மதுரை:மதுரையில் பள்ளிக்கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் சங்கக் கூட்டம் மாவட்ட தலைவர் மகாதேவன் தலைமையில் நடந்தது.இணை செயலாளர் ஜான் போஸ்கோ வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆனந்தராஜன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

மாநில துணை தலைவர் அப்துல் ரகுமான் பேசினார். நிர்வாகிகள் தேர்வு நடந்தது.மத்திய அரசு ஆய்வக உதவியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். 1.1.2016 முதல் 7 வது சம்பளக்குழு நிலுவை பணப்பயன்களை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி ஓய்வு பெற்ற நாள் முதல் கல்வியாண்டு முடியும் மே 31 ம் வரை ஆசிரியர்களுக்கு வழங்குவது போல மறுவேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

சம வேலைக்கு சம சம்பளம் என்றபடி அரசு செய்முறை தேர்வு உழைப்பூதியம்/மதிப்பூதியம் ஆய்வக உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இணை செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X