சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி

Added : பிப் 10, 2020
Share
Advertisement
பொன்னேரி : பழவேற்காடு கடற்கரை பகுதிகளில், கடல் ஆமைகளை தொடர்ந்து, டால்பின் ஒன்று இறந்த நிலையில், கரை ஒதுங்கி இருப்பதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பழவேற்காடு முகத்துவாரம் அருகே, கடற்கரை பகுதிகளில், கடந்த வாரம், 25க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள், இறந்த நிலையில் கரை ஒதுங்கின. கடற்கரை பகுதிகளில், கடல் மாசடைந்து இருப்பதால், முட்டை இடுவதற்காக கடற்கரையை நோக்கி வரும்

பொன்னேரி : பழவேற்காடு கடற்கரை பகுதிகளில், கடல் ஆமைகளை தொடர்ந்து, டால்பின் ஒன்று இறந்த நிலையில், கரை ஒதுங்கி இருப்பதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

பழவேற்காடு முகத்துவாரம் அருகே, கடற்கரை பகுதிகளில், கடந்த வாரம், 25க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள், இறந்த நிலையில் கரை ஒதுங்கின. கடற்கரை பகுதிகளில், கடல் மாசடைந்து இருப்பதால், முட்டை இடுவதற்காக கடற்கரையை நோக்கி வரும் கடல் ஆமைகள், இறந்து விடுவதாக, மீனவர்கள் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், டால்பின் மீன் ஒன்று, முகத்துவாரம் அருகே, இறந்த நிலையில், கரை ஒதுங்கி கிடந்ததைக் கண்டு, மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்து கிடக்கும் டால்பின், 8 அடி நீளமும், 50 கிலோ எடையும் கொண்டதாகும்.பொதுவாக டால்பின் மீன்கள் கூட்டமாகவே இருக்கும். தனியாக வர வாய்ப்பு இல்லை. இந்த மீன் மட்டும் எப்படி வந்தது என்பது தெரியவில்லை என, மீனவர்கள் கூறுகின்றனர்.மேலும், அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அடுத்தடுத்த கடற்கரை அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்குவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, மீனவர்கள் தெரிவித்ததாவது:பழவேற்காடு கடற்கரை பகுதியில், கடல் சுறா, கடல் ஆமைகள் தான், இறந்த நிலையில் கரை ஒதுங்கும். முதன் முறையாக டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.வடக்கு பகுதியில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலக்கிறது.கடற்கரையோரங்களில் கடல்பகுதி மாசடைந்து உள்ளது. இரைதேடி வரும் டால்பின்களும், முட்டையிட வரும் கடல் ஆமைகளும், கடல் மாசுக்களில் சிக்கி இறக்கின்றன. வனம் மற்றும் மீன்வளத் துறையினர் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X