பொது செய்தி

தமிழ்நாடு

பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா ; பனிப்பொழிவிலும் பக்தர்கள் பக்தி பரவசம்

Added : பிப் 10, 2020
Advertisement
 பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா ; பனிப்பொழிவிலும் பக்தர்கள் பக்தி பரவசம்

உத்திரமேரூர் : தைப்பூச ஆற்று திருவிழாவையொட்டி, பெருநகர் செய்யாற்றில், 20 ஊர் சுவாமிகள், நேற்று அதிகாலை, ஒரே இடத்தில் எழுந்தருளினர்.

பனிப்பொழிவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமிகளை வழிபட்டனர். பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழா, கடந்த மாதம், 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில், ஐந்தாம் நாள் உற்சவமான, பிப்., 3ல் திருக்கல்யாண உற்சவமும், ஏழாம் உற்சவமான பிப்., 5ல் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உற்சவமான, பிப்., 7ல், 63 நாயன்மார்கள் உற்சவமும் விமரிசையாக நடந்தது.

இதில், 10ம் நாள் திருவிழாவான தைப்பூச ஆற்று திருவிழாவில், பெருநகர் செய்யாற்றை சுற்றியுள்ள, 20 கிராம கோவில் சுவாமிகள், செய்யாற்றில் சங்கமித்து, பக்தர்களுக்கு தைப்பூச தரிசனம் அளிப்பது வழக்கம்.அதன்படி, தைப்பூசமான நேற்று முன்தினம், இரவு, 11:00 மணிக்கு, பெருநகர், உக்கல், ஆக்கூர், மானாம்பதி, கூழமந்தல், தண்டரை, விசூர், இளநகர், மேல்பாக்கம், தேத்துறை, சேத்துப்பட்டு, இளநீர்குன்றம், கீழ்நீர்குன்றம், அத்தி உள்ளிட்ட, 20 ஊர் சுவாமிகள், ஆற்று அருகே அமைக்கப்பட்ட, பந்தல்களில் எழுந்தருளினர்.

அனைத்து ஊர் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து, நேற்று, அதிகாலை, 3:00 மணிக்கு, சுவாமிகள் ஆற்றுக்குள் ஒரே இடத்தில் எழுந்தருளினர். அதிகாலை, 5:30 மணி வரை, தைப்பூச தரிசனமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.பின், ஆற்றில் இருந்து, அந்தந்த ஊர் கோவில்களுக்கு, சுவாமி புறப்பாடு நடந்தது. ஆற்று பகுதிக்குள் நிலவிய கடுமையான பனிப்பொழிவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை வரை காத்திருந்து, சுவாமிகளை தரிசனம் செய்தனர். பெருநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X