கார் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

Added : பிப் 10, 2020
Share
ஊத்துக்கோட்டை : அதிக வாடகை தருவதாக கூறி, கார் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கார்களை மாதக்கணக்கில் வாடகைக்கு வாங்கி, மோசடி நடப்பதாக எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., அரவிந்தன் உத்தரவின் பேரில், ஊத்துக் கோட்டை டி.எஸ்.பி., சந்திரதாசன் தலைமையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

ஊத்துக்கோட்டை : அதிக வாடகை தருவதாக கூறி, கார் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கார்களை மாதக்கணக்கில் வாடகைக்கு வாங்கி, மோசடி நடப்பதாக எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., அரவிந்தன் உத்தரவின் பேரில், ஊத்துக் கோட்டை டி.எஸ்.பி., சந்திரதாசன் தலைமையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.ஊத்துக்கோட்டை அருகே, தேர்வாய் சிப்காட் பகுதியில், தனிப்படையினர் வாகனச் சோதனை செய்தபோது, மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். போலீசார் அவர்களை விசாரித்ததில், அவர்கள், ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகர், பிரவீன்ஜார்ஜ், 29, கம்மவார்பாளையம் வெங்கடேஷ், 36, நந்திமங்களம் பாரத், 23 என்பது தெரிய வந்தது.

மேலும், ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில், 26 கார்களை வாடகைக்கு எடுத்து, மற்ற ஊர்களில் அதை கூடுதல் விலைக்கு அடமானம் வைத்தது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், 19 கார்கள் மீட்கப்பட்டன.ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சந்திரதாசன் கூறியதாவது: தற்போது, 19 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சிலரை தேடி வருகிறோம்.சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், கூடுதல் பணம் வருவதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது தவறு.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X