பொது செய்தி

தமிழ்நாடு

மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

Added : பிப் 10, 2020
Advertisement

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில், தை மாத பவுர்ணமி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (8 ம் தேதி) மாலை 4:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர்,ராஜராஜேஸ்வரி,முருகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய உலாவாக வந்து ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X