மதுராந்தகம் : சூணாம்பேடு அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று அதிகாலை, இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில், இரண்டு பேர் இறந்தனர். ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மரக்காணம் அடுத்த, ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாபாய் 55. அதே பகுதியைச் சேர்ந்த எழில்குமார், 34, கந்தசாமி, 40 ஆகியோருடன், நேற்று அதிகாலை, வீட்டில் இருந்து, சென்னை நோக்கி, காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.ஈ.சி.ஆர்., சாலையில், வேம்பனுார் வாள்பட்டறை அருகே வந்தபோது, அப்போது, சென்னையில் இருந்து, பாண்டிச்சேரி நோக்கி வந்த மற்றொரு காருடன், மோதிக்கொண்டது.
இந்த விபத்தில், இரண்டு கார்களிலும் பயணித்த, 5 பேர் படுகாயம் அடைந்ததையடுத்து, பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மருத்துவமனையில், ஆலப்பாக்கம் ராதாபாய் மற்றும் எழில்குமார் ஆகியோர் இறந்தனர்.கந்தசாமி உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, சூணாம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE