பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியில் கழிவு நீர் கலப்பதற்கு எதிர்ப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

பொன்னேரி : விவசாயம் மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டிற்கு உதவும் ஆமூர் ஏரியில், தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகளின் கழிவு நீர் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமமக்கள் கால்வாயை மண் கொட்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

பொன்னேரி அடுத்த, ஆமூர் கிராமத்தில், 600 ஏக்கர் பரப்பு கொண்ட பாசன ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நத்தம், பஞ்செட்டி, சென்னிவாக்கம், முஸ்லிம் நகர், மாதவரம் ஆகிய பகுதிகள் வழியாக, நீர்வரத்து கால்வாய் மூலம், தண்ணீர் வருகிறது.இந்நிலையில், மேற்கண்ட நீர்வரத்து கால்வாயை ஒட்டியுள்ள தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகள் கழிவுநீரரை நேரடையாக விடுகின்றன.கழிவுநீர் கால்வாய் வழியாக ஏரியில் கலந்து, தண்ணீர் மாசடைந்து வருவதாகவும், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆமூர் கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை, ஆமூர் கிராமவாசிகள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம், சென்னிவாக்கம் பகுதியில் கழிவு நீர் வரும் கால்வாயை மண்கொட்டி தடை ஏற்படுத்தினர். மழைநீர் வரும் கால்வாயில், கழிவு நீர் விடுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்திவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X