சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரிக்கெட் விளையாட்டில் பந்து தாக்கி வாலிபர் பலி

Added : பிப் 10, 2020
Advertisement

செய்யூர் : செய்யூர் அருகே, கிரிக்கெட் விளையாட்டின் போது, மார்பு மீது பந்து பட்டதில், வாலிபர் இறந்தார்.

செய்யூர் அடுத்த, சூணாம்பேடு, ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சுனில் 17.கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பு படித்து முடித்து விட்டு, சுனில் வேலை தேடி வந்தார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, செய்யூர் ஒன்றிய அ.தி.மு.க., பிரமுகர் பிரவீன்குமார் ஏற்பாட்டில், அகரம் கிராமத்தில், கிரிக்கெட் போட்டி, கடந்த மாதம் துவங்கி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில், சூணாம்பேடு, அம்பேத்கர் அணிக்காக சுனில் பேட்டிங் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அச்சரப்பாக்கம் ஜின்னா நகரைச் சேர்ந்த கமலேஷ், 16, என்ற மாணவர், அச்சரப்பாக்கம் பஜார் பாய்ஸ் அணிக்காக, பந்து வீசினார்.அப்போது, எதிர்பாராத விதமாக பந்து, சுனில் மார்பு மீது பட்டதில், அவர் மயங்கி விழுந்தார். அவரை சக நண்பர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே சுனில் இறந்தார்.இதுகுறித்து, சூணாம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X