சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார், நகை உட்பட ரூ.10 லட்சம் பொருள் கொள்ளை

Added : பிப் 10, 2020
Advertisement

திருப்போரூர் : திருக்கழுக்குன்றம் அருகே, வீட்டில் நிறுத்தப்பட்ட கார், நகை, டி.வி., உள்ளிட்ட, 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து தப்பி உள்ளனர்.

திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலுார் கிராமத்தைச் சேர்ந்த மாரி மகன் நந்தகோபால். 54; இவர், ஒராண்டாக, திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட, மங்கலம் கிராமம், முதலியார் தெருவில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.வங்கி ஊழியர் திருக்கழுக்குன்றம் எஸ்.பி.ஐ., வங்கியில் கேஷியராக பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன், நந்தகோபால் மற்றும் அவர் மனைவி சொந்த ஊரான வாயலுாருக்கு சென்றனர்.வீட்டில் இருந்த நந்தகோபால் மகன் பிரசன்னவதணன், 27, நேற்று முன்தினம், பிற்பகல், 2:00 மணிக்கு, கடும்பாட்டியில் தாய் வீட்டில் தங்கியுள்ள மனைவி மற்றும் வாயலுாருக்கு சென்றுள்ள தாய், தந்தையை பார்க்க சென்று உள்ளார்.
கதவு உடைப்புஇந்நிலையில், நேற்று, 11:45 மணிக்கு, பிரசன்னவதணன் மட்டும் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டின் சுற்றுச்சுவரின் முன்பக்க இரும்பு கேட் திறந்திருந்தது. பின் உள்ளே சென்று போது வீட்டின் முன் நிறுத்தியிருந்த, 8 லட்சம் மதிப்புள்ள, 'ஷிப்ட் கார்' காணாமல் போனதை பார்த்தார்.மேலும், முன்பக்க கதவுடன் உள்ள லாக்கரை இரும்பு கடப்பாரை மூலம் விலக்கி உடைக்கப்பட்டிருந்ததை பார்த்துள்ளார். அதேபோல் பின்புறம் உள்ள கதவும் உடைக்கப்பட்டிருந்தது.கொள்ளையர்கள் உள்ளே இருந்த சாவி மூலம் பீரோவை திறந்து தங்க செயின், பிரேஸ்லெட், மோதிரம் என, 7 சவரன் நகை மற்றும் எல்.இ.டி., டி.வி., 3,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சிஅடைந்துள்ளார்.

தடயம் சேகரிப்புஇதையடுத்து, பிரசன்னவதணன் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் மற்றும் காஞ்சிபுரம் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர்.மேற்கண்ட கொள்ளை நடந்த வீட்டின் அருகே, மதுபான கடை உள்ளதும், சுற்றிலும் வீடுகள் இல்லாமல், தனியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X