சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை, பணம் திருட்டு

Added : பிப் 10, 2020
Advertisement

மணவாள நகர் : மணவாள நகர், காந்தி தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். சென்னை, ஆர்.கே.நகரில் உள்ள, அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், உதவி பயிற்சியாளராக பணி செய்து வருகிறார்.

இவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி, இரண்டு நாட்களுக்கு முன் குடியேறினார்.வீட்டில் இன்னும் பொருட்கள் முழுமையாக வைக்காததால், நேற்று இரவு பழைய வீட்டில் குடும்பத்துடன் தங்கினார்.இந்த நிலையில், நள்ளிரவு வந்த மர்ம நபர்கள், ஜெகதீசின் புதிய வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டின் பீரோவில் இருந்த, ௩ சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்றுஉள்ளனர்.நேற்று காலை, ஜெகதீஷ் புதிய வீட்டுக்கு வந்த போது, நகை-, பணம் திருடு போனது தெரிந்தது. இது குறித்து, மணவாள நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X