குளம் தூர் வாரிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளம் தூர் வாரிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு

Added : பிப் 10, 2020
Share

திருவள்ளூர் : 'மும்மாரி - திருவள்ளூர்' திட்டத்தின் கீழ், நீர்நிலைகளை துார் வாரிய, தன்னார்வலர்கள், 104 பேருக்கு, கலெக்டர் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழைநீரை சேகரிக்கும் வகையில், நீர்நிலைகளை துார் வார, 'மும்மாரி - திருவள்ளூர்' திட்டம் கொண்டு வரப்பட்டது. கலெக்டரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தில், 125 ஏரி, குளங்களை, தனியார் நிறுவனம், பொதுமக்கள், காவல்துறை மற்றும் அரசு துறை சங்கத்தினர், சொந்த செலவில், துார்வாரினர்.கடந்த ஆண்டு பெய்த, வடகிழக்கு பருவமழையில், மேற்கண்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதன் மூலம், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இச்செயலுக்காக, 'ஸ்கோச்' தங்க விருதும் கிடைத்து உள்ளது.இந்த நிலையில், நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில், துார் வாரிய தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட, 21 பேருக்கு, கலெக்டர் மகேஸ்வரி ஏற்கனவே, பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.மீதமுள்ள, 104 பேருக்கும், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மகேஸ்வரி, அனைவருக்கும், பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ஜெயகுமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் கும்மிடிப்பூண்டி ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X