சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உயிரை பறித்த, 'ஹேர் டை'

Added : பிப் 10, 2020
Advertisement

குடும்ப பிரச்னை காரணமாக, தலைமுடி வர்ணத்துக்காக பயன்படுத்தும் சாயத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்ற பெண், மருத்துவமனையில் இறந்தார்.

சென்னை, கே.கே.நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர், ராஜ் குமார், 29; ஆட்டோ ஓட்டுனர். இவர், பவித்ரா, 23 என்ற பெண்ணை, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 3 மாத பெண் குழந்தை உள்ளது.கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல், கடந்த, 7ம் தேதி ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பவித்ரா, தலைமுடி வர்ணத்துக்காக பயன்படுத்தும், சாயத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உறவினர்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று காலை இறந்தார்.இச் சம்பவம் குறித்து, எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X