பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மைய அமைப்பாளர் பணி

Added : பிப் 10, 2020
Advertisement

விருத்தாசலம்:தகுதியான நபர்களுக்கு சத்துணவு மைய அமைப்பாளர் பணி நியமனம் வழங்க ஐகோர்டும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு பணி ஓய்வு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜயபாண்டியன் கூறினார்.
இது குறித்து அவரது அறிக்கை:அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு மைய அமைப்பாளர் காலி பணியிடங்களுக்கு, கடந்த 2016 டிசம்பர் மற்றும் 2017 ஜனவரி ஆகிய மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பிப்ரவரி 23ல் நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டது.2017 மார்ச்சில் இருந்து 2018 மார்ச் வரை, மூன்று கலெக்டர்கள் மாற்றமாகி, நான்காவது கலெக்டராக தண்டபாணி பொறுப்பேற்றதும், 2017 பிப்ரவரி 23க்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், 2018 ஜூன் 1ல் நேர்முகத் தேர்வு நடத்தினார். அதன்படி, 2018 ஜூன் 16ல் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டதில், மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.இதனால், தகுதியிருந்தும் கம்மாபுரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், நல்லுார், மங்களூர் ஒன்றியங்களில் இருந்து சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைக்காத நபர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுபோல், கலெக்டரிடம் நியாயம் கேட்டும், தகுதியான நபர்களுக்கு வேலை வழங்கக் கோரியும் மனு கொடுத்துள்ளனர்.எனவே, சென்னை ஐகோர்ட்டும், தமிழக அரசும் தகுதியான நபர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பணியிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X